Thursday 25 June 2015

ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணி

இந்தியாவின் நிதித்துறையின் கட்டுப்பாட்டு அமைப்பாகவும், இந்தியப் பொருளாதாரத்தைப் பெருமளவு நிர்ணயிக்கும் அமைப்பாகவும் இயங்கி வரும் பெருமைக்குரிய பாரத ரிசர்வ் வங்கி ஆர்.பி.ஐ., என்ற சுருக்கமான பெயரால் அனைவராலும் அறியப்படுகிறது.
இந்திய வங்கித் துறையை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பாரத ரிசர்வ் வங்கி மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்த வங்கியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் காலியாக உள்ள 504 உதவியாளர் காலியிடங்களை நிரப்புவதற்கான
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிட விபரம்: ஆர்.பி.ஐ.,யின் அசிஸ்டென்ட் காலியிடங்களைப் பொறுத்த வரை தமிழகத்தின் சென்னையில் 31 காலியிடங்கள் உள்ளன.
வயது: விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது 02.06.1987க்கு பின்னரும், 01.06.1997க்கு முன்னரும் பிறந்தவராக இருக்க வேண்டும். 
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி தேவை. இத்துடன் கம்ப்யூட்டர் தொடர்புடைய வேர்டு பிராசசிங்கில் திறன் தேவை. விண்ணப்பிக்கும் மாநில மொழியில் நல்ல மொழியறிவு கட்டாயம் தேவை.
தேர்ச்சி முறை: ஆன்-லைன் முறையில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். 
விண்ணப்பக் கட்டணம்: ரிசர்வ் வங்கியின் உதவியாளர் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க ரூ.450/-ஐக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும். முழுமையான தகவல்களுக்குப் பின்வரும் இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 03.07.2015
இணையதள முகவரி: www.rbi.org.in/

No comments:

Post a Comment