Thursday 25 June 2015

இந்தியன் பேங்கிங்

இந்தியாவிலுள்ள பொதுத் துறை வங்கிகள் மற்றும் சில தனியார் துறை ஷெட்யூல்டு வங்கிகளில் ஏற்படும் காலியிடங்களை ஐ.பி.பி.எஸ்., எனப்படும் இந்தியன் பேங்கிங் பெர்ஷனல் செலக்சன் அமைப்பு பொது எழுத்துத் தேர்வு மற்றும் பொது நேர்காணல் தேர்வுகளின் மூலமாக
நிரப்பி வருவது நாம் அறிந்ததே. இதே அமைப்பு தான் ரீஜினல் ரூரல் பேங்க் எனப்படும் ஆர்.ஆர்.பி.,க்களில் ஏற்படும் காலியிடங்களையும் இதே முறையில் நிரப்பிவருகிறது. இந்த அமைப்பின் சார்பாக வரும் செப்டம்பரில் நடத்தப்பட உள்ள ரீஜினல் ரூரல் வங்கிகளில் உள்ள உதவியாளர் மற்றும் அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரீஜினல் ரூரல் வங்கிகளில் அடுத்த ஒரு ஆண்டு காலத்தில் வரக்கூடிய காலியிடங்களுக்கு இந்த தேர்வு முறையில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளவும்.
வயது: விண்ணப்பதாரர்கள் 18 முதல் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 02.07.1987க்கு பின்னரும் 01.07.1997க்கு முன்னரும் பிறந்தவர்கள் இந்தப் பணியிடங்களுக்கான பொது எழுத்துத் தேர்வை எதிர்கொள்ள விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி: உதவியாளர் மற்றும் அதிகாரி பதவி இரண்டுக்குமே அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். அதிகாரி பதவிக்கு ஹார்டிகல்சர், அக்ரிகல்சர், வெர்டினரி சயின்ஸ், அனிமல் ஹஸ்பென்டரி, ஐ.டி., மேனேஜ்மென்ட், சட்டம் போன்ற பிரிவில் பட்டம் முடித்தவர்களுக்கு முன்னுரிமை உள்ளது. இத்துடன் கம்ப்யூட்டர் தொடர்புடைய திறமைகளும் கூடுதலாகத் தேவைப்படும்.
விண்ணப்பக்கட்டணம்: இரண்டு பதவிகளுக்குமே தலா ரூ.600/- விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்-லைன் முறையில் மட்டுமே செலுத்த முடியும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 28.07.2015
இணையதள முகவரி: //www.ibps.in/

No comments:

Post a Comment