Thursday 25 June 2015

ஐ.டி.பி.ஐ., வங்கியின் படிப்புடன் கூடிய வேலைவாய்ப்பு

இன்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட் பேங்க் ஆப் இந்தியா எனப்படும் ஐ.டி.பி.ஐ., அடிப்படையில் தொழில் துறை சார்ந்த ஒரு வளர்ச்சி வங்கியாகும். இந்த வங்கியின் சார்பாக வணிக ரீதியான தனியார் வங்கியாக ஐ.டி.பி.ஐ., வங்கி நிறுவப்பட்டது. ஐ.டி., தொழில் நுட்ப ரீதியாக அபார சேவை செய்து வரும் ஐ.டி.பி.ஐ., வங்கி ரீடெய்ல் மற்றும் கார்ப்பரேட் வங்கிச் சேவைகளுக்காக அனைவராலும் அறியப்படுகிறது. இந்த வங்கியும், கல்வித் துறையில் மிகவும் பிரசித்தி பெற்ற மனிப்பால் பல்கலைக் கழகமும் இணைந்து பி.ஜி.டி.பி.எப்., என்ற முது நிலைப் பட்டப் படிப்பை வழங்கி அதில் வெற்றிகரமாகத் தேர்ச்சி பெறுபவர்களை ஐ.டி.பி.ஐ., வங்கியில் அதிகாரிகளாக பணியில் அமர்த்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வயது: 01.06.2015 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 20 வயது நிரம்பியவர்களாகவும், 28 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். அதாவது 02.06.1987க்கு பின்னரும், 01.06.1995க்கு முன்னரும் பிறந்தவர்கள் இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். 
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்த கல்வித் தகுதியுடன் விண்ணப்பதாரர்கள் கம்ப்யூட்டர் தொடர்புடைய திறனும் பெற்றிருக்க வேண்டும்.
படிப்பின் காலம்: இந்தப் படிப்பு ஒரு வருட காலம் படிக்கக்கூடியது. போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமோ இன் பேங்கிங் அண்டு பினான்ஸ் எனப்படும் பி.ஜி.டி.பி.எப்., படிப்பாகும். 
காலியிடங்கள் எவ்வளவு: இந்தப் படிப்புடன் கூடிய பணிவாய்ப்பில் மொத்தம் 500 காலியிடங்கள் உள்ளன. இவற்றிற்கு அரசு நிபந்தனைகளின்படி எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு இட ஒதுக்கீடும் உள்ளது.
விண்ணப்பக்கட்டணம்: விண்ணப்பதாரர்கள் ரூ.700/--ஐ இந்த படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ரூ.150/-மட்டும் செலுத்தினால் போதுமானது.
தேர்ச்சி முறை: ஆன்-லைனில் நடத்தப்படும் அப்ஜெக்டிவ் வகை எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். எழுத்துத் தேர்வை தமிழ் நாட்டில் சென்னை, கோவை, மதுரை ஆகிய மையங்கள் ஏதாவது ஒன்றில் எதிர்கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 24.06.2015
இணையதள முகவரிhttp://www.idbi.com

No comments:

Post a Comment