Sunday 24 May 2015

ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் புரொபேஷனரி அதிகாரி பதவி

னியார் துறை வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி இத்துறையில் காலெடுத்து வைத்த பின்னர்தான் இன்று நாம் அனுபவித்து வரும் ஏ.டி.எம்., நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்ற பல்வேறு நவீன வங்கிச் சேவைகளுக்கான சிந்தனை என்பதே எழுந்தது.
வங்கித்துறை சேவைகளை தலை கீழாக மாற்றி, ஒவ்வொரு சாதாரண வாடிக்கையாளரும் பல்வேறு கூடுதல் பலன்களைப் பெறுவதை துரிதப்படுத்துவதில் இந்த வங்கியின் பங்கு என்ன என்பதை யாராலும் மறுத்துப் பேச வாய்ப்பே இல்லை.இன்றும் அரசுடமை வங்கி களுக்கு புதிய பாதையைக் காட்டுவதில் இந்த வங்கியின் பங்கு மகத்தானது. 
இவ்வளவு பிரசித்தி பெற்ற ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் காலியாக உள்ள புரொபேஷனரி அதிகாரி பணி காலியிடங்களை கல்வித்துறையில் மைல்கல்லாக திகழும் மனிப்பால் பல்கலைக் கழகத்துடன் இணைந்து பயிற்சிப் படிப்பின் மூலமாக நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வயது: 30.06.2015 அடிப்படையில் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 30.06.1990க்குப் பின்னர் பிறந்தவர்கள் மட்டுமே இந்தப் பயிற்சிப் பணியிட வாய்ப்புக்கு விண்ணப்பிக்க முடியும்.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் குறைந்தபட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: ஆன்-லைன் முறையில் ஆப்டியூட் டெஸ்ட், சைக்கோமெட்ரிக் டெஸ்ட், குழுவிவாதம் மற்றும் நேர்காணல் போன்ற தேர்வுகள் நடத்தப்பட்டு இதன் அடிப்படையில் பயிற்சிக்கான அனுமதி வழங்கப்படும். 
விண்ணப்பிப்பது எப்படி: விருப்பமுடைய மற்றும் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களைwww.icicicareers.com என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 30.06.2015
இணையதள முகவரிhttp://www.freejobalert.com/icici/15949/#ixzz3aD7oAUzJ

No comments:

Post a Comment