Sunday 24 May 2015

.டி.பி.ஐ., வங்கியில் அதிகாரிகள் பதவி


பதிவ

18மே
2015 
00:00
இண்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட் பேங்க் ஆப் இந்தியா எனப்படும் ஐ.டி.பி.ஐ., முதலில் தொழில் வளர்ச்சிக்காக பிரத்யேகமாக நிறுவப்பட்ட பிரத்யேகமான ஒரு வளர்ச்சி வங்கியாகும். பின் நாட்களில் வர்த்தக ரீதியான வங்கிச் சேவைகளுக்காக ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கிய போது இந்த வங்கியின் சார்பான வர்த்தக வங்கியாக ஐ.டி.பி.ஐ., வங்கி நிறுவப்பட்டது. அன்று துவங்கி இன்று வரை வங்கிச்சேவைகளில் தனி முத்திரை பதித்து வரும் ஐ.டி.பி.ஐ., வங்கியில் எக்சிகியூடிவ் பிரிவில் காலியாக உள்ள 500 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
வயது: 01.04.2015 அடிப்படையில் விண்ணப்பதாரகள் 20 வயது நிரம்பியவராகவும், 25 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இந்திய அரசின் சட்டங்களின்படி எஸ்.சி.,எஸ்.டி., பிரிவினருக்கு உச்சபட்ச வயதில் சலுகைகள் உள்ளது.
கல்வித் தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் வழியாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: ஆன்-லைன் முறையிலான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பக்கட்டணம்: இந்தப் பதவிக்காக ரூ.600/--ஐ ஆன்-லைன் முறையில் நெட் பேங்கிங், விசா/மாஸ்ட்ரோ/மாஸ்டர்/ரூபே டெபிட்/கிரெடிட் கார்டு, ஐ.எம்.பி.எஸ்., அலைபேசி வேலட் வாயிலாக செலுத்த வேண்டும். 
விண்ணப்பிப்பது எப்படி: ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். முழுமையான விபரங்களைப் பின்வரும் இணையதள முகவரிக்கு சென்று அறிந்து அதன் பின்னரே விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 22.05.2015
இணையதள முகவரிwww.freejobalert.com/idbi-bank-recruitment/14467/#ixzz3a8W5yeD9

1 comment:

  1. Thank you for your information regarding this post. I look towards bank exams and searching many sites for notifications. When I get Jobads site where I receive notifications as well as previous papers and syllabus details clearly

    ReplyDelete