Friday 8 May 2015

ரெப்கோ வீட்டுக் கடன் நிறுவனத்தில் கிளரிக்கல் பதவி

பொதுத்துறை வங்கியான ரெப்கோ வங்கியின் வீட்டுக் கடன் சார்ந்த நிறுவனமான ரெப்கோ வங்கி இத்துறையில் மற்றொரு பிரசித்தி பெற்ற நிறுவனமாகும். சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு இந்த நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வயது: 01.04.2015 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முழு நேரப் படிப்பாக பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். வீட்டுக்கடன் துறையில் முன் அனுபவம் பெற்றவர்களுக்கும், சரளமாக ஆங்கிலத்தில் உரையாடுபவர்களுக்கும், முன்னுரிமை உள்ளது.
இதர தகவல்கள்: இந்த பணியிடங்கள் ஆன்-ரோல் மற்றும் ஆப்-ரோல் என்ற இரண்டு முறைகளில் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியின் போது பயிற்சிக் காலத்தில் மாதம் ரூ.16 ஆயிரம் ஸ்டைபண்டாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் இந்த இடங்கள் கும்பகோணம், பெருந்துறை, ஈரோடு, சிதம்பரம், கேளம்பாக்கம், பெரம்பலூர், தஞ்சாவூர், வேலூர் ஆகிய மையங்களில் நிரப்பப்பட உள்ளன.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியிலான பயோ-டேட்டா படிவம், மற்றும் உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முழுமையான தகவல்களை இணைய தளத்திலிருந்து அறியவும்.
General Manager (HR) 
Repco Home Finance Limited 
3rd Floor, Alexander Square 
New No. 2/Old No. 34 & 35 
Sardar Patel Road, Guindy, Chennai-600 032.
விண்ணப்பங்கள் கிடைக்க இறுதி நாள்: 02.05.2015
இணையதள முகவரி: <http://www.repcohome.com/careers.php>

No comments:

Post a Comment